அமிழ்துதான் தமிழ்💞தமிழ்தான் அமிழ்து கணுவுகள் ஏதுமில்லா பொழுதுகள் கரைந்துபோன கம்பீர நாட்கள் கடந்தாகிவிட்டனவே சொட்டும் நீரின் ஓசையும் காற்றின் வருடலும் கார்மேக இருட்டில் மறைந்து கரைந்து காலம் கடக்க கால் கடுக்க காத்திருந்தும் ஏது பயன் ? கரையான் புத்திண் பாம்புகளாய் பிறர் கனவில் ஏறி பயணம் சென்றோமே! கனவுகள் வாழ்வின் அங்கம் என ஆனபின் சுமந்து நாமும் சென்றிடுவோம்! தோன்றிவிட்டோம் காணுவுகளை வாரி அணைத்து அண்ணாந்து மேகம் ரசித்து பயணிப்போம் முடிவிலியில் கரைந்து மறையும் வரை! 💞தமிழன்பன்💞