பரிணாமம்🙏 டைனோசர் கனவில் மனிதன் ஒரு ஜந்து. நேரம்🙏 அது ஓடிக்கொண்டிருக்கிறது நான் பார்த்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை🙏 வழியே தெரியவில்லை ஆனாலும் கம்பீரமாக நடக்கிறேன். சிரிப்பு🙏 என் ஆனந்தின் வெளிப்பாடும் என் வெறுப்பின் வெளிப்பாடும். அழுகை🙏 பல நேரம் மறைத்து வைப்பேன் தனிமையிளோ கட்டி அன்னைப்பேன். நட்பு🙏 என் நினைவுகளில் பாதி இங்கிருந்து எடுக்கப்பட்டதே. அப்பா🙏 இவர் கைகள் சுத்தியை தட்ட தட்ட நான் வளர்ந்து கொண்டே இருந்தேன் அவர் தேய்ந்து கொண்டே இருந்தார். அம்மா🙏 சதா சர்வ காலமும் அவள் சிந்தனையில் நாங்கள், ஏனோ தன்னை மறந்தே போகிறாள். தமையன்🙏 பிறரை போல் எனக்கும் இவன் நண்பனும் சில நேரங்களில் எதிரியும். காதல்🙏 காணல் நீரை எட்டி நின்றே ரசித்து செல்பவன் நான் நெருங்கி சென்றால் விலகி விடுமென்று. பாசம்🙏 நினைத்தாலும் மறைத்து வைக்க முடியாதது. கோவம்🙏 தேவையான ஒன்று தேவையற்ற நேரங்களில் வேதனையான ஒன்று. கவிதை🙏 கிருக்கல்களும் சில சமயங்களில் ஓவியமாகிறது. 💞த...