Skip to main content

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏




🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து,
🚶இசை பேசும் இனிய வேளையிலே
எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும்,
🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே
எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும்,
🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும்,
🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.
                                💞தமிழன்பன்💞

Comments

Popular posts from this blog

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

😍அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்😍

காலம் நம்மை உமிழும் போது, உறவுகள் நம்மை மறந்த போது, நட்பும் விலகி செல்லும் போது, கண்ணில் நீறும் சுரக்கும் போது, வாழ்வே வெறுத்து அனலாய் மாறும் போது, நினைவுகள் யாவும் சூழ்ந்து நம்மை கொல்லும் போது, தனிமை நம்மை கேள்வி வைக்கும் போது, கோவம் நம் எதிரி ஆகிறது பேரன்பு நம் நண்பனாகிறது. பேரின்ப வாழ்க்கை நம் கனவாகிறது.                               💞தமிழன்பன்💞