ஒரு மாற்றம் ஏனோ தடு மாற்றம்
முற்றம் சென்று முடங்கி பதுங்கியதும்,
குற்றம் செய்யாமல் வாழ்கையை கண்டு நடிங்கியதும்,
ஓடு ஓடு வென ஓடியதும் வாழ மறந்து கலங்கியதும்,
ஏன் இந்த மாற்றம் ஏன் இந்த தடு மாற்றம்
கருவென முளைத்து வந்தோம் சேய்யென பிறந்து வந்தோம்,
இளமையென வளர்ந்து நின்றோம்.
இதற்கு மேல் செல்ல ஏனோ பயந்து நின்றோம்,
வாழ்கையென்பது மலையுச்சி அல்ல
வெறும் காலங்களின் நீட்சி,
கவலையெல்லாம் மூட்டை கட்டி போகும் வழியில் தூக்கி கொட்டி,
காரணம் இன்றி சிரித்து கொண்டு மெல்ல நடந்து வாழ்கை நடத்தி,
போகும் வழியில் தேடி கொள்வோம்.
முயற்சி பலவும் விதைத்து செல்வோம்
மரமாய் வளர்ந்து நிழல் தருமென,
வரும் துன்பங்களை துரத்தி செல்வோம்
நீ எனக்கு சொந்தம் இல்லையென,
இன்புற்று வாழ்வோம் நாமும் கர்வம் கொண்டு வாழும் வரை அன்பை தந்து
இவுலகத்தின் மேல் தீர காதல் கொண்டு.
💞தமிழன்பன்💞


Comments
Post a Comment