Skip to main content

சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!----நா. முத்துக்குமார்.


பரிணாமம்🙏
டைனோசர் கனவில் மனிதன் ஒரு ஜந்து.

நேரம்🙏
அது ஓடிக்கொண்டிருக்கிறது நான் பார்த்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை🙏
வழியே தெரியவில்லை ஆனாலும் கம்பீரமாக நடக்கிறேன்.

சிரிப்பு🙏
என் ஆனந்தின் வெளிப்பாடும் என் வெறுப்பின் வெளிப்பாடும்.

அழுகை🙏
பல நேரம் மறைத்து வைப்பேன்
தனிமையிளோ கட்டி அன்னைப்பேன்.

நட்பு🙏
என் நினைவுகளில் பாதி இங்கிருந்து எடுக்கப்பட்டதே.

அப்பா🙏
இவர் கைகள் சுத்தியை தட்ட தட்ட நான் வளர்ந்து கொண்டே இருந்தேன் அவர் தேய்ந்து கொண்டே இருந்தார்.

அம்மா🙏
சதா சர்வ காலமும் அவள் சிந்தனையில் நாங்கள், ஏனோ தன்னை மறந்தே போகிறாள்.

தமையன்🙏
பிறரை போல் எனக்கும் இவன் நண்பனும்
சில நேரங்களில் எதிரியும்.

காதல்🙏
காணல் நீரை எட்டி நின்றே ரசித்து செல்பவன் நான் நெருங்கி சென்றால் விலகி விடுமென்று.

பாசம்🙏
நினைத்தாலும் மறைத்து வைக்க முடியாதது.

கோவம்🙏
தேவையான ஒன்று தேவையற்ற நேரங்களில் வேதனையான ஒன்று.

கவிதை🙏
கிருக்கல்களும் சில சமயங்களில் ஓவியமாகிறது.
                              💞தமிழன்பன்💞

Comments

Post a Comment

Popular posts from this blog

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞

திருடன் போல் வந்தான்

புறத்தில் சத்தம் கேட்குதே! சன்னல் கதவு பட படனு அடிக்குதே! மாடியில எவனோ உருட்டுறானே! ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே! ஏதோ எங்கேயோ எரியுதே! காவல் இருக்கும் நாயும் குறைக்குதே! ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ? அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ? மண் மணக்கும் வாசம் வருதே! தண்ணீர் சத்தம் தாளம் போடுதே! பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!                                ❤தமிழன்பன்❤