Skip to main content

மூணார்


இசை இனிது என்றேன்
இரவில் அமைதி இனிது என்றேன்
மௌனத்தின் இன்பம் இனிது என்றிருந்தேன்
மேகம் வந்து என் உயிர் மூச்சில் கலக்க
மூணாற்றின் இருளில் வனத்தின் மத்தியில் எதோ கண்டறியா பூச்சிகளின் இசை அழகென்று உணர்ந்தேன்
இருளின் மடியில் பேரின்பம் கொண்டேன்
இவ் அழகிய காட்சியில் ஏனோ புரிய இன்பம் கொண்டேன்,
மகிழ்ச்சியின் உச்சியில் நின்று ஏனோ இத்தருணத்தை காதல் கொண்டேன்❤



சூரியன் வந்து சுட்டெரிக்கும் சில நேரம்,
மேகம் வந்தவனை சூழ்ந்துகொள்ள,
பச்ச வண்ண மேனியாள் அழகு ததும்பி நிற்கிறாள்,
கரு கரு மேகங்கள் மலையை முட்டி செல்ல,
குளிர் காற்று வந்தென்னை சூழ்ந்து கொள்ள,
பாலம் ஒன்றில் காற்றில் கால் ஆட  மொவ்நித்து அமர்ந்து இயற்கையின் தாள் பணிகிறேன்.
                                       ❤தமிழன்பன்❤

Comments

Popular posts from this blog

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞

திருடன் போல் வந்தான்

புறத்தில் சத்தம் கேட்குதே! சன்னல் கதவு பட படனு அடிக்குதே! மாடியில எவனோ உருட்டுறானே! ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே! ஏதோ எங்கேயோ எரியுதே! காவல் இருக்கும் நாயும் குறைக்குதே! ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ? அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ? மண் மணக்கும் வாசம் வருதே! தண்ணீர் சத்தம் தாளம் போடுதே! பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!                                ❤தமிழன்பன்❤