கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். 💐தமிழன்பன்💐
Comments
Post a Comment