வெறும் தண்ணீர் இடமா ஒப்பிடுவேன் ஒப்பனைக்கும் எட்டா விழிகளை?
தண்ணீரும் வற்றலாகுமே! அந்த கண்ணாடியும் உடைந்து போகுமே!
நான் கொண்ட காதலோ யுககங்கள் கடந்தும் வாழுமே!
கதை புனையும் கலைகள் தான் கலை அரசியிடம் பலிக்குமோ?
ரகசியம் கேட்கிறாயே என் ரகசியமே நீதானே?
தூது சொல்ல வந்தவனை கரம் பிடித்து கொள்வாயா?
காதல் கொண்டு வந்தவனை காதலனாக ஏற்பாயா?
கரத்தை பற்றி நீ உரைத்த மொழிகள் என் ரத்தம் உறைய செய்கிறது கொஞ்சம் பித்தும் பிடிக்க செய்கிறது,
காலம் நூறு ஆனாலும் முதுமை வந்து சேர்ந்தாலும் நம் காதல் மட்டும் வாழுமே!
காலம் கடந்தும் காவியம் ஆகக் கூடுமே!

Comments
Post a Comment