Skip to main content

ஓவியம் பேசும் கவிதை


இது பார்வையா? இல்லை பூவளி சிறு விழி வழி வந்துதென்னை முத்தமிடும் வித்தையா?
வித்தை ஒன்றும் அறியா பிறவியம்மா
இப்பிறவியில் என்றும் நீ என்னவளம்மா
அவ்விடமும் இவ்விதமே என சற்று அருள் புரியுமம்மா!
காதல் புரியும் கலை அறியா உன்னவனோ உம்மை விட காதல் அதிகம் கொண்டவனம்மா!
உன் அன்பை கொண்டென்னை வென்றவளே இது போல் தினம் தோற்கயில் உள்ளம் நெகிழுதம்மா!
இருமனம் சேர்ந்து வாழ வாழி நிந்தன் முடிவை சொல்ல இம்மாலையை சற்று சூடிகொள்ளலம்மா இம்மானிடனை ஏற்றுக்கொள்ளம்மா!
-தமிழன்பன்💐

Comments

Popular posts from this blog

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞

திருடன் போல் வந்தான்

புறத்தில் சத்தம் கேட்குதே! சன்னல் கதவு பட படனு அடிக்குதே! மாடியில எவனோ உருட்டுறானே! ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே! ஏதோ எங்கேயோ எரியுதே! காவல் இருக்கும் நாயும் குறைக்குதே! ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ? அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ? மண் மணக்கும் வாசம் வருதே! தண்ணீர் சத்தம் தாளம் போடுதே! பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!                                ❤தமிழன்பன்❤