Skip to main content

Posts

Showing posts from 2018

தம் மக்கள் மழலைச்சொல்

கண்ணசைவிலும் இசை பிறக்குமாம், வாய்திறந்தால் புது வரிகள் இனிக்குமாம், கையசைகையில் தென்றலும் தோற்குமாம், மெல்ல நடைபோடயில் நதியும் பார்த்து ரசிக்குமாம், செவ்விளம் பாதம் கண்டு கிழக்கும் நாணமுற்று கருகுமாம், கொடியவனும் வாழ்ந்ததுண்டு அன்பு புத்தனும் வாழ்ந்ததுண்டு இவ்வழகிய பருவத்தில், உயர் வள்ளுவனும் பாடியதுண்டு இத்துளிர் பருவத்தை, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்.                                               💐தமிழன்பன்💐

😍அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்😍

காலம் நம்மை உமிழும் போது, உறவுகள் நம்மை மறந்த போது, நட்பும் விலகி செல்லும் போது, கண்ணில் நீறும் சுரக்கும் போது, வாழ்வே வெறுத்து அனலாய் மாறும் போது, நினைவுகள் யாவும் சூழ்ந்து நம்மை கொல்லும் போது, தனிமை நம்மை கேள்வி வைக்கும் போது, கோவம் நம் எதிரி ஆகிறது பேரன்பு நம் நண்பனாகிறது. பேரின்ப வாழ்க்கை நம் கனவாகிறது.                               💞தமிழன்பன்💞

சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!----நா. முத்துக்குமார்.

பரிணாமம்🙏 டைனோசர் கனவில் மனிதன் ஒரு ஜந்து. நேரம்🙏 அது ஓடிக்கொண்டிருக்கிறது நான் பார்த்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை🙏 வழியே தெரியவில்லை ஆனாலும் கம்பீரமாக நடக்கிறேன். சிரிப்பு🙏 என் ஆனந்தின் வெளிப்பாடும் என் வெறுப்பின் வெளிப்பாடும். அழுகை🙏 பல நேரம் மறைத்து வைப்பேன் தனிமையிளோ கட்டி அன்னைப்பேன். நட்பு🙏 என் நினைவுகளில் பாதி இங்கிருந்து எடுக்கப்பட்டதே. அப்பா🙏 இவர் கைகள் சுத்தியை தட்ட தட்ட நான் வளர்ந்து கொண்டே இருந்தேன் அவர் தேய்ந்து கொண்டே இருந்தார். அம்மா🙏 சதா சர்வ காலமும் அவள் சிந்தனையில் நாங்கள், ஏனோ தன்னை மறந்தே போகிறாள். தமையன்🙏 பிறரை போல் எனக்கும் இவன் நண்பனும் சில நேரங்களில் எதிரியும். காதல்🙏 காணல் நீரை எட்டி நின்றே ரசித்து செல்பவன் நான் நெருங்கி சென்றால் விலகி விடுமென்று. பாசம்🙏 நினைத்தாலும் மறைத்து வைக்க முடியாதது. கோவம்🙏 தேவையான ஒன்று தேவையற்ற நேரங்களில் வேதனையான ஒன்று. கவிதை🙏 கிருக்கல்களும் சில சமயங்களில் ஓவியமாகிறது.                               💞த...

இளமை பய(ண)ம் 😭😫😨 நன்றி பொன் மூர்த்தி👍👍

ஒரு மாற்றம்  ஏனோ தடு மாற்றம் முற்றம் சென்று முடங்கி பதுங்கியதும், குற்றம் செய்யாமல் வாழ்கையை கண்டு நடிங்கியதும், ஓடு ஓடு வென ஓடியதும் வாழ மறந்து கலங்கியதும், ஏன் இந்த மாற்றம் ஏன்  இந்த தடு மாற்றம் கருவென முளைத்து வந்தோம் சேய்யென பிறந்து வந்தோம், இளமையென வளர்ந்து நின்றோம். இதற்கு மேல் செல்ல ஏனோ பயந்து நின்றோம், வாழ்கையென்பது மலையுச்சி அல்ல வெறும் காலங்களின் நீட்சி, கவலையெல்லாம் மூட்டை கட்டி போகும் வழியில் தூக்கி கொட்டி, காரணம் இன்றி சிரித்து கொண்டு மெல்ல நடந்து வாழ்கை நடத்தி, போகும் வழியில் தேடி கொள்வோம். முயற்சி பலவும் விதைத்து செல்வோம் மரமாய் வளர்ந்து நிழல் தருமென, வரும் துன்பங்களை துரத்தி செல்வோம் நீ எனக்கு சொந்தம் இல்லையென, இன்புற்று வாழ்வோம் நாமும் கர்வம் கொண்டு வாழும் வரை அன்பை தந்து இவுலகத்தின் மேல் தீர காதல் கொண்டு.                                         💞தமிழன்பன்💞

நெஞ்சாங்கூட்டில்💞

என்னதான் மாயம் செய்தாளோ இறு விழிதனை தூங்க செய்யாமல்  அவன் மதிதனை மயங்க செய்தவள், என்னதான் காதல் செய்தானோ அவன் மதிதனை மீறி செல்லாமல் அவள் இதயத்தை தீண்டிச்சொல்லாமல்.                                               💞தமிழன்பன்💞

தீயோடு போகும் வரையில் தீராது இந்த தனிமை🙏

🚶நிழல் பேசும் தனிமை தருணத்திலே அகம் பேசும் சற்று புறம் தவிர்த்து, 🚶இசை பேசும் இனிய வேளையிலே எந்தன் மனம் பேசும் கள்ள மொழி பேசும், 🚶காற்றின் நயம் பேசும் நல்ல மாலையிலே எந்தன் மனம் பேசும் எந்தன் நயம் பேசும், 🚶நிலவின் ஒலிபேசும் அந்த மொவ்னத்திலே என்தன் மனம்பேசும் கர்வ மொழி பேசும், 🚶கடல் பேசும் அந்த காலையிலே எந்தன் மனம் பேசும் என்தன் வாழ்க்கையினை.                                 💞தமிழன்பன்💞

அண்ணாந்து பார்😍💞

அமிழ்துதான் தமிழ்💞தமிழ்தான் அமிழ்து கணுவுகள் ஏதுமில்லா பொழுதுகள் கரைந்துபோன கம்பீர நாட்கள் கடந்தாகிவிட்டனவே சொட்டும் நீரின் ஓசையும் காற்றின் வருடலும் கார்மேக இருட்டில் மறைந்து கரைந்து காலம் கடக்க கால் கடுக்க காத்திருந்தும் ஏது பயன் ? கரையான் புத்திண் பாம்புகளாய் பிறர் கனவில் ஏறி பயணம் சென்றோமே! கனவுகள் வாழ்வின் அங்கம் என ஆனபின் சுமந்து நாமும் சென்றிடுவோம்! தோன்றிவிட்டோம் காணுவுகளை வாரி அணைத்து அண்ணாந்து மேகம் ரசித்து பயணிப்போம் முடிவிலியில் கரைந்து மறையும் வரை!                                   💞தமிழன்பன்💞

ரோசா பூ சின்ன ரோசா பூ 💞💞

நட்டுவெச்ச கிளையில மொட்டு வெச்ச ரோசா, வெட்கப்பட்டு போய் சிறிதாய் சிரித்து கொண்டு பூக்கிறது, பக்கம் வந்தவ கைப்பட்டு உச்சம் நின்று பார்க்கிறது, நட்டு வெச்சவ கூந்தளிலே மறுநாள் காஞ்சி போய் உதிர்கிறது.                                      

நிழற்படம் வழி தென்றல் வந்து தீண்டும் போது❤💞

மலை நாட்டு குளுரில் சூரியன் ஓடி ஒழிய, பச்சை நிர போர்வை குறிஞ்சி நிலத்தை அழங்கரிக்க, குட்டி கரும் புலிகள் அன்போடு தோள் சேர எட்டி பார்க்கும் மர கிளைகள் உள்ளம் மகிழ்ந்து தென்றல் தூவ தென் திசை நாட்டின் தமிழ் பிஞ்சிகள் மகிழ்ந்து புன்னகைக்க அங்கு அடிக்கும் குளிரின் ஈரம் நிழற்படம் கடந்து இங்கும் நிழல் தரும் மாயையை நான் கண்டேன்.                              💞தமிழன்பன்💞

முதல் முதலாய் என் அம்மாவுக்கு ❤💞

கண் தெரியாது இருட்டுலகம் என நம்பினேன், எதிரில் தோன்றினாள் கண் நிறைய ஆனந்தத்தின் கூறுகள் முகம் நிறைய புன்னகை பூக்கள், நடை கிடையாது நமக்கென, கண்ணில் நீரும் வாய் நிறைய புன்னகையும் கொண்டு தவழ பழகினேன், கரம் தந்து சிரம் தாழ்த்தி நடை பழக முதல் நம்பிக்கை தந்து நடைபோட செய்தாள், மௌனமே நம் மொழி இதற்கு மேல் எதற்கு தனி மொழியென விட்டு விட்டேன் பேரின்பம் பூத்து வாரி அனைத்து உச்சியில் முத்தம் ஒன்று தந்தால் நான் சொன்ன ஒற்றை சொல்லான அம்மாவுக்கு 🙏🙏🙏                               ❤தமிழன்பன்❤

வானின் நீளம் கொண்டு வா ❤

காதலால் உன்னை காணும் கண்ணால் காணும் யாவும் கண்ணில் பதியும், ஒட்டிக்கொண்டு புது வரி கேக்கும் சத்தியம் செய்தும் சொல்வதுண்டு உன்னை எழுதும் கவி அல்லன் ஒரு பெண்ணை நெஞ்சில் கொண்டு புலம்பித்தள்ளும் பித்தனென்று.                                  ❤தமிழன்பன்❤

அண்டம் 🙏

அண்டம் இதுவே புரிகிறதே மின்னும் ஒளியே சிலிர்கிறதே பால் வண்ணம் ஒளிர்கிறதே வளி மண்டலம் வளுவூட்ட பகலும் இருவவும் பிரிகிறதே நீறும் இங்கு பங்களிக்க உயிர்கள் இங்கு வளர்கிறதே, ஈர்ப்பும் பெரிதாய் கடன் தந்து காற்றின் வறுடல் மகிழ்விக்க மனிதன் வாழ்வும் நகர்கிறதே உலகம் இதுவே தெரிகிறதே, காதல் பூவாய் மலர்கிறதே, அளவற்ற அண்டமிதில் எங்கோ இது போல் நிகளாதே உயிரும் ஏனோ இருக்காதா? நாளை கண்டம் தாண்ட முடியாதா? அன்பை மட்டும் கொண்டு இயங்கும் காலமும் பிறவாதா?                                💐 தமிழன்பன்💐

மூணார்

இசை இனிது என்றேன் இரவில் அமைதி இனிது என்றேன் மௌனத்தின் இன்பம் இனிது என்றிருந்தேன் மேகம் வந்து என் உயிர் மூச்சில் கலக்க மூணாற்றின் இருளில் வனத்தின் மத்தியில் எதோ கண்டறியா பூச்சிகளின் இசை அழகென்று உணர்ந்தேன் இருளின் மடியில் பேரின்பம் கொண்டேன் இவ் அழகிய காட்சியில் ஏனோ புரிய இன்பம் கொண்டேன், மகிழ்ச்சியின் உச்சியில் நின்று ஏனோ இத் தருணத்தை காதல் கொண்டேன்❤ சூரியன் வந்து சுட்டெரிக்கும் சில நேரம், மேகம் வந்தவனை சூழ்ந்துகொள்ள, பச்ச வண்ண மேனியாள் அழகு ததும்பி நிற்கிறாள், கரு கரு மேகங்கள் மலையை முட்டி செல்ல, குளிர் காற்று வந்தென்னை சூழ்ந்து கொள்ள, பாலம் ஒன்றில் காற்றில் கால் ஆட  மொவ்நித்து அமர்ந்து இயற்கையின் தாள் பணிகிறேன்.                                        ❤தமிழன்பன்❤

கன்னம் தொட்டாள்❤

அன்றொரு நாள் இரவினிலே காதருகே வந்தாள் இனிய மூச்சு காற்றை விட்டாள் பலவற்றை கொஞ்சும் மொழியுடன் உரைத்தாள் பூங்கரத்தை கொண்டு என் கன்னம் தொட்டாள் அன்போடு வந்தாள் அன்பால் நனைய செய்தாள் கண் மூடி குருநகையோடு ஆனந்த துயில் கொண்டாள் அம்மா பாப்பா தூங்கிவிட்டாள் வா என்று நான் தூங்க சென்றேன் தூக்கம் சொருகிய மழலையின் முகம் பேர் அமைதியின் பிறப்பிடம் உண்மை அன்பின் இருப்பிடம்

தனிமை தடயங்கள் 😂

தென்றல் வந்து அவள் முடியை வம்பு செய்ய, அவள் கரங்கள் வந்து தென்றலை போர் புரிய, வேடிக்கை பார்த்த என்னை அவள் விழியால் சிறைபிடிக்க, நேரம் கரைய அவள் கரம்பிடித்து நடக்க ஆசை எனக்கும் உண்டு, கடைசியில் என் தனிமை தடயங்களை எள்ளி நகையாடி கொண்டே அழித்துவிட்டு காதலர்கள் வருவார்கள் நீ விரைந்து செல் என்றது கடல்.                                          ❤தமிழன்பன்❤

வா! நீ வா வா!

வா நீ வா வா என் உயிரே நீ வா வா வா நீ வா வா என் உயிரே நீ வா வா காதல் கொண்டு என் உயிரை குடைந்தாய் குடைந்தையே கண்டாயா ஒரு அழகு ஒன்று கண்டாயா வியன்தயா உணர்ந்தயா என் உயிரோடு படர்வாயா வாழ வழி கொடு இல்லை விழி கொண்டு கொன்று விடு வா நீ வா வா என் உயிரே நீ வா வா வா நீ வா வா என் உயிரே நீ வா வா திசையெங்கும் தீருவோம் வா திசை மாறி செல்வோம் வா வழி எங்கும் நடப்போம் வா இரு கரம் கோர்த்து கொள்வோம் வா காலங்கள் சென்றிடுமே நரை கூட வந்திடுமே மாறாமல் வாழ்ந்திடுவோம் காதலை மெய்பிபோம் உண் கண் கொண்டு செய்தி கொடு என் உயிர் கொண்டு படையெடுப்பேன் வா நீ வா வா என் உயிரே நீ வா வா வா நீ வா வா என் உயிரே நீ வா வா

நிலவே என்னை மயக்காதே😊

நிலா ஒளி அழைக்குதே, காற்று வருடும் சத்தமும் காதுக்குள்லே இசைக்குதே, மேகம் மெல்ல குறு நகையாய் நகைக்குதே, ஒளி வட்டம் கண்ணை கொள்ளை கொள்ளுதே, வான் வரைந்த ஓவியமே பொருள் மட்டும் விளக்கிவிடு, உன் அழகால் இவ்வுலகத்தில் அன்பை வாரி பொழிந்துவிடு.                                   ❤தமிழன்பன்❤

திருடன் போல் வந்தான்

புறத்தில் சத்தம் கேட்குதே! சன்னல் கதவு பட படனு அடிக்குதே! மாடியில எவனோ உருட்டுறானே! ஒலி இல்லாம வீடு இப்படி இருளுதே! ஏதோ எங்கேயோ எரியுதே! காவல் இருக்கும் நாயும் குறைக்குதே! ஐயோ இது என்ன பேயோ? பிசாசுதானோ? அந்த மூணாது தெரு கொலைகாரன் இவன் தானோ? மண் மணக்கும் வாசம் வருதே! தண்ணீர் சத்தம் தாளம் போடுதே! பெரும் மழையாய் வருகுதே இப்படி அறிவிப்பு ஏதும் இன்றி!!                                ❤தமிழன்பன்❤

தாய் தமிழ் 😊

மொழியில் பல தலைமுறை மனிதம் வாழ்வதுண்டு, ஒரு மொழி இழிவென்றும் ஒரு மொழி பெரிதென்றும் சொல்லலாகாது, பல மொழியும் கற்க முற்படு உன் மொழியின் சிறப்பை அறிந்திடு, மொழியை காதல் செய்ய பலகிடு பிற மொழியை வெறுத்தல் மறந்திடு, உன் மொழியின் கலப்பை கலை எடு களினியில் சிறப்பை கோபுரம் போல் நிறுத்திடு, தாய் தமிழை இரு கண்ணாய் கறுதிடு செம்மொழியின் தாள் பணிந்திடு.                                  ❤தமிழன்பன்❤ உலக தாய் மொழி தினம்😍 International mother language day😍

வாடா மகனே! வாடா! 😍

  வாடா மகனே! வாடா! உந்தன் செவ்இதழ் கொண்டு கொஞ்சும் முத்தம் தந்து போடா! வாடா மகனே! வாடா! உந்தன் உதட்டை கொண்டு எந்தன் உயிரை தொட்டு போடா! வாடா மகனே! வாடா! என் ஒத்த சொத்தே வாடா! என் கவலையை அறுத்து எரிய உன் முத்த ஆயுதம் கொண்டு வாடா! வாடா மகனே! வாடா! உன் முத்தம் எனும் மந்திரத்தால் என்னை மயக்கி விட்டு போடா! வாடா மகனே! வாடா! உன் முத்த கருவி  கொண்டு என்னை இசைத்து விட்டு போடா! வாடா மகனே! வாடா! முத்தம் ஒன்று இட்டு உன் மூச்சி காத்து கொண்டு என் யாக்கைக்கு கொஞ்சம் உயிர் தந்து போடா! வாடா மகனே! வாடா! உந்தன் எச்சில் வர்ணம்  கொண்டு ஒரு ஓவியம் வரைந்து போடா! என்னை கர்வம் கொள்ள செய்தவனே! என் அருகில் கொஞ்சம் வாடா! என் விழிநீர் துடைக்க வந்தவனே! என் அருகில் கொஞ்சம் வாடா! என் இன்பஊற்றின் பிரப்பிடமே! என் அருகில் கொஞ்சம் வாடா! வாடா வாடா வாடா! என்றும் வாடா! முகத்துடன் வாடா!                                   😍தமிழன்பன்😍

ஊர்கூடும் தெருக்கோடி குளத்துல 🤐😭

நீர் வற்றி, துணி தோய்க, துளி தண்ணி இல்ல தெரு கோடி குட்டையிலே, மீன் புடிக்க தூண்டில் போட்டு மீன் ஒன்னும் பிடிக்காம, வெறுத்து போய் வந்த குளம், இன்னைக்கு வெறும் குளமா ஆயிடுச்சு. தக தகனு தங்கம் போல, அந்தி சாயும் நேரத்துல இருந்த குளம், இன்னைக்கு மீன் செத்து நாறிபோச்சி. பண மரத்து அடியில, பாய் விரித்து படுத்த குளம், இணைக்கோ மாடி வீட்டு அழுக்கு தண்ணியில, நியாயம் கேட்டு அழுகுது. பனை ஓசை கேட்ட குளம், நாதி அற்று கிடக்குது 😭😨  நீர் வற்றிய குளத்துல, நினைவுகள் மட்டும் நிரம்பி வலியுது.                                             ❤தமிழன்பன்❤

பூங்குழலி-- பூவை போன்ற குழல் (கூந்தல்) உடையவள்❤

பெயருக்கேற்ப இனிமையானவள் இயற்கை இடம் காதல் உற்றவள் எழுக்கடலுக்கும் சொந்தக்காரி படகோட்டி இவள் பாடுகயிலே! அலை கடல் தான் பொங்கயிலே அகக்கடல் தான் பொங்குவதேன் அழகிய கிளியே உன்தன் கரம் பிடிக்க  சேந்தன் இருக்க இந்த துடுப்பை கட்டி அழுவதேன்.. அழகிய பூங்குழலி                            🙏தமிழன்பன்🙏

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும்

பாட்டுத் தலைவனாய் தென்னங்கீற்றை வைத்தேன், அவனுடன் பாட்டு தலைவி முழுநிலவு கொஞ்சி விளையாடும் காதல் காட்சியை கண்டு உள்ளம் கொள்ளை போக நின்றேன்! கீற்றின் வழி இளம் தென்றல் முட்டி வந்து முத்தம் தர என் சித்தம் மகிழ்ந்திட நின்றேன்! இவ்அழகிய காட்சிகள் யாவும் முண்டாசு பண்ணையாரின் காணி நிலத்தில் சிரம் உயர்த்தி விழி பிதுங்க நின்று கண்டேன்!                                  ❤தமிழன்பன்❤

ஆழிசூல் உலகில் கிழக்கு செவுக்கும் வேலையில்❤

உதிக்கும் காலை வேலையில் செவுக்கும் அழகிய கிழக்கில் ஆழியை பார்த்து நடமாடுகயில் எட்டி பார்க்கும் குட்டி உயிரும் எடுத்து வைக்கும் மழலையும் பெற்றெடுத்த இரு உயிரும் பார்த்து போகையில், வீசும் இன்ப கற்று முத்தமிட்டு போகும்! உள்ளம் மகிழ்ந்து போகும்!                         ❤தமிழன்பன்❤

கண்கள் எங்கே..நெஞ்சமும் அங்கே,..கண்ட போதே சென்றன அங்கே

மையிட்ட கண்ணால் முகம் மலர்ந்து பார்த்தவள் புருவம் உயர்த்தி உயிரை வந்து தொட்டவள் கண் அடித்து  செல்லுகையில் உள்ளம் களவு போனது தேடி கொண்டு வருகிறான் உள்ளம் கொடுத்து அனுப்பிவை காதல் வந்து சொல்லுவான் கரம் பிடித்து காதல் செய்! ❤

குழந்தை சிரிப்பின் சிறப்பு 💐👌👌😊❤

துயில்கொள்ளும் வெண்ணிறத்தான் என்ன கனா கண்டானோ முகம்மலர்ந்து ஒளிர்கிறான் நஞ்சிலா மனசுக்காரன்  விழி மூடியும் என்னத்த கண்டனோ இப்படி மலர்கிறான் செந்நிற உதட்டுக்காரன் மொழி கூட தெரியாம என்னத்த படிச்சானோ இப்படி சிரிக்கிறான் கையோடு கை கோர்க்கும் வித்தைக்காரன் காதல் கீதல் கொண்டானோ இப்படி மகிழ்கிறான் துணியால் கவசம் கொண்டவன் எந்த நாட்டை பிடிச்சானோ இப்படி பேரின்பம் கொள்கிறான் பிறக்கும் போதே தானே ஒட்டி கொள்ளும் இரு உணர்ச்சியும் சாகும் மட்டும் மாறாது இன்பம் துன்பம் ரெண்டு உண்டு இங்கே எதையும் தவிர்க்க முடியாது  மழலை இவன் கற்பிக்க மகிழ்ந்து வாழ பழகுவோம்!                              😍தமிழன்பன்😍 அனைத்து உயிரும் இன்புற்று வாழ்க!!

அன்பே பேரின்பத்தின் உற்று 😍

கடந்து சென்ற வெண்நிலவை நின்று இன்று வியக்க செய்யும் பேரின்பத்தின் உச்சி நிலை காதல்! எச்சில் ஊரும் குட்டி குழந்தையின் தட்டு தடுமாறும் மொழியும் இசையென செவி சுவைக்...

அழகு குட்டி செல்லம் ❤

கண்ணே கனியே என் உயிர் துடிப்பின் காரணமே நின்னை இனி என் உயிரென கொள்வேன், என் உயிர் பிரியையிலும்  உன்னை வந்து காப்பேன்! எனக்கென பிறந்த அதிசயமே உன் மழலை மொழி கோர்த்து ஒரு சொல் உரைப்பாயா? உன் அப்பா எனும் சொல் செவியில் விழின் அக்கணமே சிக்கணமாய் இருந்த என் அன்பு பல்கி பெருக நான் கண்டேன் என் நெஞ்சில் கசியும் மாய நதியுற்றை என் கண்மணியே என் உயிரின் நகலே உன்னால் நான் அடைந்த மகிழ்ச்சியில் இவ்உயிர் பிரியினும் நான் மரப்பேன்  சற்றே நிம்மது இன்றி இம்மதி மயங்கினும் நான் உனை மறவேன்! என் விழிநீர் அழிக்க வந்த பேருயிரே நீ வாழ்!                       ❤தமிழன்பன்❤

வரம் தருவாள் மரம் 💐

மங்கை அவள் சற்றே சிரம் உயர்த்தி வெண்நிற ஆடை கொண்ட கற்களின் குழந்தையாம் மணலை முட்டி சென்ற விதையா காற்றில் அலையும் மாரி கொண்டு சென்றிடும் மேகத்தை முத்தமிடுகிறாள் என்று தன் மொத்த நினைவை ஒன்றாக்கி இயற்கையின் பால் காதல் கொண்டு நனைகிறாள் தன் உள்ளம் மகிழ வியக்கிறாள்❤                                      🙏 தமிழன்பன்🙏

ஓவியம் பேசும் கவிதை

இது பார்வையா? இல்லை பூவளி சிறு விழி வழி வந்துதென்னை முத்தமிடும் வித்தையா? வித்தை ஒன்றும் அறியா பிறவியம்மா இப்பிறவியில் என்றும் நீ என்னவளம்மா அவ்விடமும் இவ்விதமே என சற்று அருள் புரியுமம்மா! காதல் புரியும் கலை அறியா உன்னவனோ உம்மை விட காதல் அதிகம் கொண்டவனம்மா! உன் அன்பை கொண்டென்னை வென்றவளே இது போல் தினம் தோற்கயில் உள்ளம் நெகிழுதம்மா! இருமனம் சேர்ந்து வாழ வாழி நிந்தன் முடிவை சொல்ல இம்மாலையை சற்று சூடிகொள்ளலம்மா இம்மானிடனை ஏற்றுக்கொள்ளம்மா! -தமிழன்பன்💐

காதல் போர் - A war of love

கண் இமைக்காமல் நின்று இளம் கன்னியின் பக்கம் நோக்க மொட் என இருந்த உள்ளம் காதல் பூவாய் மலர புயல் காற்றென மலர்ந்த உள்ளம் திக்எட்டிலும் சட சட வென குழம்ப புது கவிதைகள் பல வந்து உள்ளம் மகிழ முப்பதினாயிரம் புறவிகள் நடுவில் வெள்ளை பரிமேல் அழகி நிந்தன் கரம் பிடித்து காதல் போர் புரிய உந்தன் செங்கோல் கிழ் ஆட்சி செய்ய காத்திருக்கும் ஒரு சிற்றரசினனின் புலம்பல் நீ கேளாய்யோ மதம் பிடித்த களிறு போல் காதல் வன்துணை முட்ட மனம் இரண்டும் பொன்னியிலே தோனிப்போல் மிதக்க வேல் முனையை கண்டு நான் அஞ்சியது இல்லை கன்னியே உன் இரு கண் விழி கொண்டு நீ என்னை கொள்ள என் உள்ளமோ திசையெங்கும் சென்று பேரின்ப நடனம் புரிய ஒரு சொல் கேட்டேன் அடி தோழி அது உன் வாய் மொழியோ என உள்ளம் கடந்து ஏங்க கொன்று விட்டாய்யடி உன் உளியால் என்னை சிற்பமாய் செதுகுவாயென காத்திருந்த என்னை பொடி கற்கள்லாய் உடைத்து விட்டு செல்ல என்றும் உன் வரவை காத்து நாட்கள் பல யுகங்களாய் ஓட புது வாசம் ஒன்று வீச மறைந்த சூரியன் கிழக்கில் உதிக்க உள்ளம் இரண்டும் உச்சி வானத்தில் பறக்க கனா ஒன்று கண்டேன் தோழி அதில் நான் உன் கரத்தை பிடிக்க உன்னவனை நீ ஏக்கத்தில்...

முத்தமிட்டால் தமிழ் அன்னை

அந்திநேர தென்றல் வந்தென் செவிக்கு செய்தி சொல்ல புது வெள்ளம் போல் தாய் தமிழ் வந்துஎன்னக் ஆட்கொள்ள சுடர் மிகும் என் மொழியை என்றும் நான் காதல் கொள்ள தமிழை வணங்கி தமிழை தொழுது தமிழை படித்து போற்றிட என் உள்ளத்துகு தூது அனுப்பி மகிழ்கிறேன் ❤

காதல்மழை பொழிந்தது

வெறும் தண்ணீர் இடமா ஒப்பிடுவேன் ஒப்பனைக்கும் எட்டா விழிகளை? தண்ணீரும் வற்றலாகுமே! அந்த கண்ணாடியும் உடைந்து போகுமே! நான் கொண்ட காதலோ யுககங்கள் கடந்தும் வாழுமே! கதை புனையும் கலைகள் தான் கலை அரசியிடம் பலிக்குமோ? ரகசியம் கேட்கிறாயே என் ரகசியமே நீதானே? தூது சொல்ல வந்தவனை கரம் பிடித்து கொள்வாயா? காதல் கொண்டு வந்தவனை காதலனாக ஏற்பாயா? கரத்தை பற்றி நீ உரைத்த மொழிகள் என் ரத்தம் உறைய செய்கிறது கொஞ்சம் பித்தும் பிடிக்க செய்கிறது, காலம் நூறு ஆனாலும் முதுமை வந்து சேர்ந்தாலும் நம் காதல் மட்டும் வாழுமே! காலம் கடந்தும் காவியம்  ஆகக் கூடுமே!

சாகா வரம் வாய்த்த வள்ளுவன்

அன்புண்டு அறிவுண்டு உழவுண்டு உலகனைத்தும் உன்னால் தமிழுக்கு பெருமை உண்டு. ஏடெடுத்து ஈரடியில் நெறி தொகுத்து முப்பால் அளித்து உலகப்பொதுமறை வடித்த பெருந்தகையே! வாழிய நின் புகழ்         -அன்புடன் தமிழன்பன்

வானதியின் புலம்பல்

மொழிஎன்றாலே அழகு அதுவும் நீர் அருள்மொழி ஆயிற்றே லங்கைகு நீர் போர் புரிய செல்ல என் மனமோ உனக்கு காவல் செல்ல என் உடலோ மூர்ச்சடித்து கொள்ள சற்றனெ உன் தமக்கை தாங்கிக்கொள்ள நீர் என்னை கடந்து ஏங்க கண்விழித்தேன் உம் காதல் வந்தெனக்கு தூது சொல்ல ஆண்டுகள் பலவும் நான் கார்திருப்பேன் வெற்றி வாகை ஒன்று நீ சூடிகொள்ள உன் உடன் என்றும் நான் காதல் கொள்ள உன் உள்ளத்தில் இடம் ஒன்று கொடு உன் பட்டது ராணி எனும் எண்ணம் என்றும் எனக்கு இல்லை பொன்னியின் செல்வரே வேண்டுதல் முடிந்தாய்ற்று உன் அருள் வேண்டி காத்திருக்கும் வானதி.               -அன்புடன் தமிழன்பன்❤                

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

மெல்லிய பூங்காற்றிலும் புரியா மொழியில் இசை ஒன்று கண்டேன் நடு நிசியில் வெண்நிர ஓளி இன்றியும் பல வகை உவமை கண்டேன் வெறும் வனத்திலும் பல் வகை பூ மலர்வதை கண்டேன் வற்றிய நதியிலும் ஜீவன் இருத்தலை கண்டேன் கொடும் உள்ளத்திலும் ஒரு வகை அன்பை கண்டேன் அன்பொன்றே மெய் என கண்டேன் இந்த வையகத்தை தீரா காதல் கொண்டேன்.

புது வெள்ளம்

புது விதை தூவி பலர் அன்பை நாடி எழுதி மடித்து வைத்ததை தூசி தட்டி வைக்கிறேன் பிழைகள் இருப்பின் திருத்திடு உன் கருத்தை கொஞ்சம் பதிவிடு                                -அன்புடன் தமிழன்பன்